328 பேரூராட்சிகளில் திமுக வெற்றி.. அதிமுக பிடித்த இடங்கள் எத்தனை?.. கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pandidurai T | Feb 22, 2022 06:10 PM

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது. இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

DMK Himalayan victory in urban local body elections

நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல்

தமிழ்நாட்டில் 11 ஆண்டுகள் கழித்துச் சென்ற பிப்ரவரி மாதம் 19 அன்று 21 மாநகராட்சி, 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது. காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பல இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளைத் தாண்டி சுயேட்சை வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.  இதுவரை 21 மாநகராட்சிகளின் 1,373 வார்டுகளில் 494 வார்டுகளை திமுக வசப்படுத்தியுள்ளது.  அதிமுக 55 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.  இதன் மூலம் 21 நகராட்சிகளின் மேயர் பதவியைக் கைப்பற்ற திமுகவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளின் 3,842 வார்டுகளில் திமுக 1,579 வார்டுகளை வெற்றி பெற்றுள்ளது.

திமுக இமாலய வெற்றி

இதன் மூலம் அக்கட்சி 122 நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. அதேபோன்று மொத்தம் உள்ள  489 பேரூராட்சிகளின் 7,604 வார்டுகளில் திமுக 2,901 வார்டுகளில் வெற்றி பெற்று 328 பேரூராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் மாநகராட்சிகளில் 91 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  நகராட்சியில் 453 வார்டில் வெற்றி பெற்று 4 நகராட்சிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. 952 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்று 19 பேரூராட்சிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.

தனித்து போட்டி

திமுக அதிமுக கூட்டணிகளைத் தவிர்த்துத் தனித்துப் போட்டியிட்ட பாஜக, பாமக, நாம் தமிழர், தேமுதிக மற்றும் மநீம போன்ற கட்சிகளும் சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.  மாநகராட்சி வார்டுகளில் தேமுதிக 6 வார்டிலும், நகராட்சி வார்டுகளில் 23 வார்டிலும், பேரூராட்சியில் 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சியில் பாஜக 3 வார்டுகளிலும், நகராட்சியில் 27 வார்டிலும் பேரூராட்சியில் 50 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். மாநகராட்சியில் பாமக 3 வார்டுகளிலும், நகராட்சியில் 28 வார்டிலும் பேரூராட்சியில் 41 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவனம் ஈர்த்த விஜய் மக்கள் இயக்கம்

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் தி.மு.க, அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளரான  முகமது பர்வேஸ்  விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  547 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இராணிப்பேட்டை மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாலாஜா நகராட்சி 3வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் பூக்கடை மோகன்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் வெற்றி பெற்றுள்ளார். மேலும், தேனி மாவட்டத்தில் தளபதி மக்கள் இயக்கம் சார்பில் அனுமந்தன்பட்டி பேரூராட்சி 14 வது வார்டில் போட்டியிட்ட P. வேல்மயில் வெற்றி பெற்றுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்திற்கு 4வது வெற்றி கிடைத்தது.

திமுக தலைவர் ஸ்டாலின்

7,604 வார்டுகளில் திமுக 2,901 வார்டுகளில் வெற்றி பெற்று 328 பேரூராட்சிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான் இந்த வெற்றி; திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது. தவறு செய்தால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

Tags : #URBAN LOCAL BODY ELECTION #DMK #AIADMK #CM MK STALIN #CHENNAI #TAMILNADU #EDAPPADI PALANISAMY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DMK Himalayan victory in urban local body elections | Tamil Nadu News.