முதல்வர் ஐயா.. எங்கள பிளஸ் 2 எப்படியாவது பாஸ் பண்ணி விடுங்க.. சிரித்துக் கொண்டே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pandidurai T | Jan 17, 2022 12:57 PM

திருவள்ளூர் சென்றுவிட்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பும்போது சாலையில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவர்கள் ஐயா எப்படியாவது 12த் பாஸ் பண்ணி விடுங்கய்யா என்று முதல்வரிடம் மாணவர்கள் கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

12 th student request to pass in public exam to CM Stalin

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த பின்னர் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை.

அதே ஆண்டு 1 முதல் பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. கடந்த 2020 - 2021ஆம் கல்வியாண்டில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதையடுத்து 1 முதல் பிளஸ் 2 வரைக்கும் ஆல்பாஸ் போடப்படும் என்று  அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அறிவித்தார். இதனால் பள்ளி மாணவர்கள் ஊர் திருவிழா, பல்வேறு நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு கட் அவுட் வைத்து கொண்டாடினர்.

12 th student request to pass in public exam to CM Stalin

அனைவரும் தேர்ச்சி

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.  மாணவர்கள் தேர்வு எழுதாத காரணத்தால் எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வில் இருந்து 50 சதவிகித மதிப்பெண்களும், +1 பொதுத் தேர்வில் இருந்து 20 சதவிகிதமும், +2 செய்முறை தேர்வில் 30 சதவிகிதம் என 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட 12ம் வகுப்பு  மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். செய்முறை தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது.

12 th student request to pass in public exam to CM Stalin

கடந்த முறை போன்றே இந்த ஆண்டும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அளிப்பதன் மூலம் மதிப்பெண் வழங்குதலில் பெரும் சிரமமான ஒன்று. இது அவர்களது கல்லூரி பாடத்திட்டத்தை பாதிக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், மாணவர்கள் பள்ளி வகுப்பை தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.

மொத்தமா சோலிய முடிச்சிட்டாங்க.. செம ஃபார்மில் வடகொரிய ஹேக்கர்கள்! பயனாளர்கள் கடும் அதிர்ச்சி

மீண்டும் விடுமுறை

கொரோனா பரவல் மூன்றாவது அலையும் ஓமிக்ரான் வைரஸ் பரவலும் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திருப்புதல் தேர்வும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு வைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில்,  12-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

12 th student request to pass in public exam to CM Stalin

 

ஸ்கூல்ல நல்லா படிச்சா 'இந்த' மிருகக்குட்டி பரிசா கிடைக்குமாம்..!- மாணவர்களை உற்சாகப்படுத்தும் விநோத திட்டம்..!

ஐயா பாஸ் பண்ணிவிடுங்க

திருவள்ளூருக்குச் சென்றுவிட்டு முதல்வர் சென்னை திரும்பும் வழியில் சாலையில் நின்று கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள், 'ஐயா பிளஸ் 2 எப்படியாவது பாஸ் போட்டு விடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்ட  முதல்வர் ஸ்டாலின் பதில் ஏதும் கூறாமல் சிரித்துக் கொண்டே சென்றார்.

12 th student request to pass in public exam to CM Stalin

Tags : #12 TH STUDENT #PASS IN PUBLIC EXAM #CM STALIN #முதல்வர் ஸ்டாலின் #பள்ளி மாணவர்கள் #12த் பாஸ்

மற்ற செய்திகள்