'யாராவது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க'...'ரோட்டில் தவித்த முதியவர்கள்'...பயந்து ஒதுங்கிய பொதுமக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 07, 2020 11:17 AM

மூச்சு திணறல் காரணமாக சாலையோரத்தில் தவித்த இரு முதியவர்களுக்கு, பயத்தால் பொதுமக்கள் யாரும் உதவ முன்வராத நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CoronaVirus : People scared to help Roadside people in Palani

பழனியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு முன்பு, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள பழனி பேருந்து நிலையத்தில், மூதாட்டி ஒருவரும், பேருந்து நிலையத்திற்கு வெளியே முதியவர் ஒருவரும் மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தனர். படுத்திருந்த நிலையில் யாராவது உதவி செய்யுங்கள் என இருவரும் தவித்த நிலையில், இருவருக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் இருவர் ககுறித்தும் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவரையும் மீட்டு, பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் பழனி மருத்துவமனைக்கு பரிசோதைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.