'அவங்கள' கூட்டிப்போங்க.. எப்படியும் 'ஓட' பாப்பாங்க..முதல்வர் மகனுக்கு 'ஐடியா' .. அதேபோல 'நடந்த' என்கவுண்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 06, 2019 04:40 PM
நாடு முழுவதும் பிரியங்கா ரெட்டியின் மரணம் தொடர்பான குற்றவாளிகளை போலீசார் என்கவுண்டர் செய்தது, குறித்துத்தான் பேச்சாக இருக்கிறது. பொதுமக்கள் இதனை வரவேற்றாலும், சிலர் இந்த என்கவுண்டருக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த என்கவுண்டர் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு தெலுங்கானா அரசிடம் கேட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த என்கவுண்டர் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில ட்வீட்டுகள் வைரலாகி வருகின்றன. அதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கேடிஆருக்கு நெட்டிசன் ஒருவர் சொன்ன யோசனை தற்போது வைரலாகி வருகிறது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி கேடிஆர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர்.
Now user @konafanclub not found.
Mastermind behind ☺️😊☺️😊#HyderabadEncounter #HyderabadMurder #JusticeForPriyankaReddy #hyderabadpolice pic.twitter.com/dK3IV16MUn
— Ashish kumar dubey (@Ashishdu7) December 6, 2019
ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை? என வேதனை தெரிவித்து இருந்தார். அவரின் ட்வீட்டை கோட் செய்து நெட்டிசன் ஒருவர், '' சார் நீங்க நெஜமா அவங்களுக்கு தண்டனை கொடுக்க நினைச்சா, பிரியங்கா ரெட்டி இறந்த இடத்துக்கு அவங்கள கூட்டிப்போய் எப்படி கொலை செஞ்சாங்கன்னு, நடிச்சு காட்ட சொல்லுங்க. அப்ப எப்படியும் அவங்க தப்பிச்சு ஓட பாப்பாங்க. போலீசுக்கு வேற வழி இல்லாம அவங்கள சுட்டு கொல்ற மாதிரி இருக்கும். இதைப்பத்தி நீங்க ஒரு தடவ யோசிச்சு பாருங்க,'' என என்கவுண்டர் ஐடியா கொடுத்து இருக்கிறார்.
அதேபோல இன்று குற்றவாளிகள் நால்வரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரம் யோசனை சொன்ன நெட்டிசனின் ட்விட்டர் அக்கவுண்ட் நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
