சென்னையில் புறநகர் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்!.. எங்கு வரை செல்லும்?.. எத்தனை முறை செயல்படும்?... முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்அக்டோபர் 7 முதல் மீண்டும் சென்னை புறநகர் மினசார ரெயில் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் அனைத்து வகையான ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் சரக்கு ரெயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில், அக்டோபர் 7-ஆம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
புறநகர் ரெயில் சேவையில் பணியாற்றும் 100% பணியாளர்களை 1-ஆம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் இல்லாமல் முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தல் செய்துள்ளனர்.
மேலும் 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில் சேவை தினசரி செயல்பட்டு வந்த நிலையில், தற்போது தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், தேவைக்கு ஏற்ப முழுமையாக சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புறநகர் ரெயில் சேவை எங்கே வரை செயல்படும், எத்தனை முறை என்ற திட்டம் தற்போது வரையறுக்கப்பட்டு வருகிறது. இதுவரை புறநகர் ரெயில் சேவைக்கான வழிமுறைகளை மத்திய ரெயில்வே வெளியிடவில்லை. ஆனால், புறநகர் ரெயில் சேவையை தமிழக அரசு அனுமதிக்க தயராக இருக்கிறது என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.