சென்னையில் 'இ-பாஸ் சேவை' நிறுத்தமா?... 'வெளிமாவட்டங்களுக்கு' செல்ல 'தடையா?...' 'நிலவரம் என்ன?...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இ-பாஸ் சேவையை நிறுத்துவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உறுதி செய்யப்படுகிறது. அதிலும் சென்னையிலேயே நோய்த் தொற்று அதிகமா கண்டறியப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். மகாராஷ்டிராவில் 82,968 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 31,667 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் 22,149 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
சென்னையில் பாதிப்பு அதிகம் இருக்கும் சூழலில் வரும் நாள்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து சென்னையை முழுமையாகத் தனிமைப்படுத்த ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்க தற்போது இ-பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இ-பாஸ் சேவையை நிறுத்துவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
