"அவங்க ரூபாய் நோட்டுல 'பிள்ளையார்' படம் போட்ருக்காங்க...." "நாம 'லட்சுமி' படம் போடுவோம்..." சூப்பர் ஐடியா கொடுத்த பொருளாதார 'மேதை'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பண மதிப்பு உயரும் என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதார மந்த நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க, ஈரான் போர் பதற்றம் போன்ற காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில், ரூபாய் மதிப்பு உயர பா.ஜ.க மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தா வியாக்யான்மாலா என்ற பெயரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தோனேஷிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர்.
இதை கருத்தில் கொண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமியின் படம் அச்சிட, தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், அதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உலக அளவில் உயரும் என்றும் தெரிவித்தார் இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கெனவே வானவில்லில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள நிலையில், புதிதாக கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை கண்டு பொதுமக்கள் திகைத்து போயுள்ளனர்.
