பொங்கல் ரிலீஸ் .. தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர் பலி!... கொண்டாட்டத்திற்கு நடுவே நேர்ந்த சோகம்!!..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 11, 2023 04:11 PM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'வாரிசு' திரைப்படம் தற்போது திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

Chennai Fan succumbed to injury in movie release event

Also Read | ஜோஷிமத் மாதிரியே பூமிக்குள் புதையும் அடுத்த நகரம்.. பீதியில் பொதுமக்கள்.. உச்சகட்ட பரபரப்பில் அதிகாரிகள்..!

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது வாரிசு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் போலவே, தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான அஜித் குமாரின் துணிவு திரைப்படமும் இன்று திரை அரங்குகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி சிறப்பான வரவேற்பை பெற்று வரும் சூழலில், ரிலீசுக்கு முன்பில் இருந்தே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து திருவிழா போலவும் இதனை கொண்டாடி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் ரசிகர் ஒருவருக்கு நேர்ந்துள்ள துயரம் ஒன்று, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல திரை அரங்கில் ரசிகர்கள் கூடி நடனமாடியும் உற்சாகமாக திரைப்பட ரிலீஸை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது பரத்குமார் என்ற இளைஞர், மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது ஏறி நடனமாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அவர் அஜித் ரசிகர் என தகவல் தெரிவிக்கும் நிலையில், லாரியில் ஆடி கொண்டிருந்த அவர் திடீரென கீழே குதித்ததில் அவரது முதுகு தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த ரசிகர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத் குமார், சிகிட்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். புதிய படங்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் ரசிகருக்கு நேர்ந்த நிலை தற்போது பலரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல திரை அரங்கில் ரசிகர்கள் கூடி நடனமாடியும் உற்சாகமாக திரைப்பட ரிலீஸை கொண்டாடி கொண்டிருந்தனர்.  இதில் அஜித் ரசிகர் என கூறப்படும் பரத்குமார் என்ற இளைஞர், மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது ஏறி நடனமாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் லாரியில் ஆடி கொண்டிருந்த அவர் திடீரென கீழே குதித்ததில் அவரது முதுகு தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அருகில் இருந்த ரசிகர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத் குமார், சிகிட்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். புதிய படங்களின் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு மத்தியில் ரசிகருக்கு நேர்ந்த நிலை தற்போது பலரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது

Also Read | "அதிர்ஷ்ட தேவதை தாறுமாறா கண் தொறந்துருக்கு போல".. 2 மாசத்துல 16 கோடி.. தலைகீழான பெண்ணின் வாழ்க்கை!!

Tags : #CHENNAI #FANS #MOVIE RELEASE EVENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Fan succumbed to injury in movie release event | Tamil Nadu News.