"பொண்டாட்டி, புள்ளைங்கள பாக்க போறேன்னு சொல்லி".. டான்சர் ரமேஷ் இறப்பதற்கு முன் நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 28, 2023 11:40 AM

டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் டான்சர் ரமேஷ். சென்னையை சேர்ந்த இவர், தெருக்களில் நடனமாடி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரமேஷ் பகிரும் வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகவும் செய்யும்.

Dancer Ramesh mother about her son demise exclusive

                                                                   Images are subject to © copyright to their respective owners

பலரின் ஃபேவரைட் நபராகவும் வலம் வந்த டான்சர் ரமேஷ், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு பல பிரபலங்களையும் தனது நடனத்தால் கவரவும் செய்திருந்தார்.

தொடர்ந்து தனது நடன திறமையால் ஒரு சில திரைப்படங்களிலும் தோன்றி இருந்த டான்சர் ரமேஷ், சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அஜித் குமாரின் துணிவு திரைப்படத்திலும் தோன்றி இருந்த டான்சர் ரமேஷ், அதில் சில இடங்களில் அசத்தலாக நடனமாடவும் செய்திருந்தார். இதுவும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்த நிலையில், தனது பிறந்த நாள் தினமான நேற்று (27.01.2023) டான்சர் ரமேஷ் மறைந்துள்ளார். இது தொடர்பாக வெளியாகி இருந்த முதற்கட்ட தகவல்களின் படி, சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த டான்சர் ரமேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம், அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இது தொடர்பாக போலீசார் தரப்பில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Dancer Ramesh mother about her son demise exclusive

Image Credit : Zee Tamil

இந்த நிலையில், டான்சர் ரமேஷின் தாயாரும் சில பரபரப்பான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். மகனின் மரணம் குறித்து பேசுகையில், "இன்னைக்கு அவன் பொறந்தநாளு. அவன் பொண்டாட்டி பிள்ளைகளை பார்க்க போறேன்னு சொல்லி இருக்கான். அப்ப காலையில் இருந்து சண்டை நடந்துருக்கு. நீ உன் பிள்ளைங்க, பொண்ணுங்களை பார்க்க கூடாது அப்படின்னு சொல்லி 2 ஆவது மனைவி சண்டை போட்டுருக்காங்க.

சாயந்திரம் 3 மணிக்கு வெளியே போயிட்டு வந்திருக்கான். அப்போ திரும்பவும் போய் பாத்துட்டு வந்துடுறேன்னு சொல்லி அவன் கேட்டதுக்கு சண்டை நடந்திருக்கு. எங்களுக்கு அஞ்சு மணிக்கு தான் இங்க நியூஸ் வந்துச்சு. எங்களுக்கு இதுல சந்தேகம் இருக்கு" என ரமேஷின் தாயார் தெரிவித்துள்ளார்.

Dancer Ramesh mother about her son demise exclusive

மேலும், "இரண்டு படம் நடிச்சான், பணம் சம்பாதிச்சான் நீ எங்க இருந்தாலும் நல்லா இருந்தா போதும்ன்னு நினைச்சேன். இதுவரைக்கும் அவன் கிட்ட இருந்து பத்து ரூபா கூட நான் வாங்குனது கிடையாது. இன்னைக்கு பிறந்தநாள் அதுவுமா சாவு நாள் ஆயிடுச்சு. இதுதான் எங்களுக்கு வேதனையாவும் வருத்தமாகவும் இருக்கு" என கூறினார்.

Tags : #DANCER RAMESH #CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dancer Ramesh mother about her son demise exclusive | Tamil Nadu News.