‘பேங்க் வேலை ஏதாச்சும் முடியாம இருக்கா?’.. கவலை வேண்டாம்.. இந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களும்..’
முகப்பு > செய்திகள் > வணிகம்By Sangeetha | Mar 29, 2019 05:02 PM
மார்ச் 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் அனைத்தும் மற்ற நாட்களைப் போல், வழக்கமாக செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
'வருகின்ற மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும். இதையொட்டி அனைத்துத் துறை நிறுவனங்களும், தங்களது வரவு செலவுக் கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டால், பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்திக்கும்' என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதனால், வருகிற ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளான RTGS, NEFT ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதிலும் மார்ச் மாதம் 30-ம் தேதி இரவு 8 மணி வரையிலும், மார்ச் 31-ம் தேதி மாலை 6 மணி வரையிலும், வங்கிகளை கட்டாயமாக திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும், ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.