மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் 16வது பட்டமளிப்பு விழா..!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் 16வது பட்டமளிப்பு விழா நடக்கிறது.

வரும் டிசம்பர் 4-ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 11 மணி முதல், நடைபெறும் இந்த நிகழ்வு மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு நிறுவன ஆடிட்டோரியத்தில் நடக்கவுள்ளது.
இந்நிகழ்வில் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேந்தர் A.N.ராதாகிருஷ்ணன், நிறுவன தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாகடர்.டி.சாந்தாராம், துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் நீலகண்டன், பதிவாளர் பேராசிரியர் முனைவர் கிருத்திகா ஆகியோர் பங்குபெறுகின்றனர்.
இவர்களுள் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேந்தர் A.N.ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துவக்கவுரையாற்றுகிறார்.

மற்ற செய்திகள்
