'9 வருட' பந்தம் முடிவுக்கு வந்தது.. ராஜஸ்தானை விட்டு 'வெளியேறிய' ரஹானே.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 14, 2019 06:04 PM

ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரரான ரஹானேவை டெல்லி அணி விலைக்கு வாங்கியுள்ளது. இதன் வழியாக அந்த அணியுடனான 9 வருட பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

IPL2020: Rahane traded to Delhi Capitals details here

கடந்த 2011-ம் ஆண்டு ரஹானே மும்பை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு வந்தார். அதில் இருந்து அவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார். 2016-2017 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணி தடை செய்யப்பட்டது. மீண்டும் 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் விளையாடியபோது ரஹானே தலைமை வகித்தார்.

அந்த ஆண்டு பிளே ஆப்புக்கு ராஜஸ்தான் முன்னேறியது. ஆனால் 2019-ம் ஆண்டு ரஹானே தலைமையில் அந்த அணி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் ஸ்மித்தை அணியின் கேப்டனாக ராஜஸ்தான் நியமனம் செய்தது. என்றாலும் பிளே ஆப்புக்கு அந்த அணி முன்னேறவில்லை.

இந்தநிலையில் இந்த வருடம் ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்களை பிற அணிகளுக்கு விற்பனை செய்தும், அவர்களிடம் இருந்து வாங்கியும் வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் தன்னுடைய அணியில் இருந்து ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரை டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு விற்பனை செய்துள்ளது.

அங்கித் ராஜ்புத்தை பஞ்சாப் அணியிடம் இருந்து வாங்கியுள்ளது. இதன் மூலம் ரஹானேக்கு ராஜஸ்தான் அணியுடனான 9 வருட பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. கேப்டன் விவகாரத்தில் ஏற்பட்ட உரசல்கள் தான் இதற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.