'கொரோனா பாதிப்பு'... '4 வண்ணங்களாக பிரிக்கப்பட்ட சென்னை'... 'அதிகம் பாதித்தவர்கள் இவர்கள்தான்'... 'சென்னை மாநகராட்சி வெளியீடு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பை நான்கு வண்ணங்களாக பிரித்த நிலையில், அது குறித்த தகவல்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் 214 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் குணமடைந்து உள்ளனர். பாதிப்புகளின் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்டலங்கள் சிவப்பு, ஆரஞ்சு, இளம் ஆரஞ்சு, பச்சை ஆகிய நான்கு வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 64 பேர் பாதித்துள்ள ராயபுரம் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளது.
அதற்கடுத்து திருவிக நகரில் 31 பேர், 24 பேர் பாதித்துள்ள கோடம்பாக்கம், 22 பேர் பாதித்துள்ள அண்ணாநகர், 20 பேர் பாதித்துள்ள தண்டையார்ப்பேட்டை, 18 பேர் பாதித்துள்ள தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளன.
7 பேர் பாதித்துள்ள பெருங்குடி மற்றும் அடையாறு, 5 பேர் பாதித்துள்ள வளசரவாக்கம், 4 பேர் பாதித்துள்ள திருவொற்றியூர், 3 பேர் பாதித்துள்ள மாதவரம் மற்றும் ஆலந்தூர், 2 பேர் பாதித்துள்ள சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் இளம் ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளது. இது வரை பாதிப்பு உறுதி செய்யப்படாத மணலி மற்றும் அம்பத்தூர் ஆகிய மண்டலங்கள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளது.
Here's the Graphical Representation of total Covid-19 positive cases in Chennai as on 15-04-2020.#Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/Rmgrm5DXOf
— Greater Chennai Corporation (@chennaicorp) April 16, 2020
