சென்னை ‘டிஎம்எஸ்’ வளாகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு ‘கொரோனா’ தொற்று.. அதிகாரிகள் தீவிர விசாரணை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 11, 2020 10:12 AM

சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chennai DMS office employee affected by coronavirus

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் என்ற ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத்துறை, காசநோய் தடுப்பு, தேசிய சுகாதார திட்டம் உட்பட பல்வேறு அலுவலகங்களும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளன.

இந்த நிலையில் ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரியும் 45 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வளாகத்தில்தான் தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொரோனா குறித்த செய்தியாளர் சந்திப்பை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. நேற்று தலைமை செயலரும் இங்கு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். இதில் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று எந்த வழியில் பாதிக்கப்பட்டிருக்கும்? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.