'வணக்கம் டா மாப்ள!... நீட் தேர்வுக்கு படிக்கிறயா?.. நான் உனக்கு சொல்லி தரேன்!'... மாணவர்களை மிரளவைத்த கண்டுபிடிப்பு!... சென்னை பொறியாளரின் 'நிஜ' எந்திரன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 13, 2020 07:20 PM

நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயராகும் மாணவர்களுக்கு பாடம் பயிற்றுவிக்கும் புதிய ரோபோ ஒன்றை பொறியியல் பட்டதாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

chennai engineer designs a robo for neet coaching

மாநகரங்கள், நகரங்கள் கடந்து பெரும்பாலும் கிராமப்புறங்களில் மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வடசென்னையை சேர்ந்த கெனித் ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார்.

பெண் வடிவில் இருக்கும் இந்த ரோபோ கணினியுடன் இணைக்கப்பட்டு அதில் நீட் தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் மத்தியில் இந்த ரோபோ பாடம் எடுக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் தருகிறது ரோபோ. எந்திரன் படத்தில் வருவதைப் போன்று இந்த ரோபோவும் அதற்குரிய குணாதிசயத்தோடு கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. உதாரணமாக நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால், எனக்கு சாப்பாடு தேவை இல்லை; நான் மின்சாரத்தில் இயங்கும் ரோபோ என்று பதில் தருகிறது.

ஆசிரியர்கள் இல்லாத மலைவாழ்  மாணவர்களுக்காக வடிவமைத்து இருப்பதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அரசு அங்கீகாரம் அளித்தால் பரவலாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதும் இவர்களது நம்பிக்கை.

 

Tags : #VADACHENNAI #NEET #ENGINEER #ROBOT #COACHING