'சென்னை' உட்பட 'நான்கு' மாவட்டங்களில்... மீண்டும் 'பொது' முடக்கம்... 'விவரம்' உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிலும், குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு மருத்துவக் குழுவுடன் ஆலோசனைக் குழு ஒன்றை நடத்தியது.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும்.
உணவகங்கள் காலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வர தேவையில்லை.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகள் இயங்க அனுமதியில்லை. அந்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு அரசு நிவாரணங்களை நேரடியாக வழங்கப்படும்.
சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு இறப்பு, கல்யாணம், மருத்துவம் ஆகியவற்றிற்கு தகுந்த ஆதாரம் அளித்தால் மட்டுமே E Pass வழங்கப்படும்.
அதே நேரத்தில் சரக்கு போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
