‘தொடர் மழை எதிரொலி’... ‘தேர்வுகளை ஒத்திவைத்த’... ‘2 யுனிவர்சிட்டிகள்’... ‘விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 28, 2019 10:13 AM
தொடர்மழை காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் இன்று நடைபெறுவதாய் இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார். மேலும், இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், இன்று நடைப்பெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள், வரும் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.