'சென்னையில் இளைஞர் உயிரிழப்பு...' 'கடைசியா சிக்கன் தான் செஞ்சு சாப்பிட்டோம்...' மருத்துவர்கள் தீவிர ஆய்வு... !
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிக்கன் செய்து சாப்பிட்ட வடமாநில இளைஞர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த கிபருல் இஸ்லாம் என்ற 21 வயது இளைஞர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவமனை வந்த சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து நண்பர்களிடம் விசாரணை நடத்திய மருத்துவர்கள், மூச்சு திணறல் ஏற்படுவதற்கு முன்பு தாங்கள் அனைவரும் சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் இளைஞரது இறப்பு தொடர்பாக மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் உயிரிழந்த இளைஞருக்கு கோரோனோ அறிகுறி போல வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சு திணறல் இருப்பதால் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்த மருத்துவ நிர்வாகம், ரத்த மாதிரி அறிக்கை வந்த பிறகே அந்த இளைஞர் எதனால் உயிரிழந்தார் என்பது தெரியவரும் என கூறியுள்ளனர். மேலும் கிபருல் இஸ்லாம் உடன் இருந்த நண்பர்களையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
