"என்னடா பாத்துட்டு இருக்க போன்ல"!? "ஒன்னும் இல்ல மா... என்னோட மிஸ்ஸு..." - நிர்வாண படங்களை 'சிறுவனுக்கு' அனுப்பிய டீச்சர்... அதிர்ந்து போன அம்மா!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் முன்னாள் அழகி பட்டம் வென்றவரும், ஆசிரியையுமாக இருந்த பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா- கனாவா கவுண்டியில் இருக்கும் ஆண்ட்ரு ஜாக்சன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர், ரம்சே கார்பென்டர் பியர்ஸ் (29). கடந்த 2014-ஆம் ஆண்டு மிஸ் கென்டக்கி பட்டம் வென்றவர். கென்டக்கி யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்றுள்ளார்.
திருமணமான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு திடீரென்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அழகியாக இருந்த இவரின் கைது அப்போது, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
பிறகு விசாரணையில், இவர் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவனின் போனை பெற்றோர் எதிர்பாரதவிதமாக பார்த்த போது, அதில் ரம்சேயின் நான்கு மேல் ஆடை இல்லாத புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதை அவர் சமூகவலைதளமான ஸ்நாப் சாட் மூலம் மாணவனுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து நடந்து வந்த விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். "எனது செயல்களுக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்.
நான் இதற்கு முன்பு இதுபோன்று எதையும் செய்ததில்லை. நான் ஒருபோதும், மீண்டும் இது போன்று செய்ய மாட்டேன் என சத்தியம் செய்கிறேன். இந்த வழக்கின் காரணமாக மிகுந்த மனச்சோர்வு அடைந்துள்ள நான், விடா முயற்சியுடன் பணியாற்றி வந்த என் வேலையையும் இழந்துவிட்டவேன்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.