'சேட்டா பஸ்சை நிறுத்துங்க'... 'மூச்சிரைக்க ஓடி வந்த பெண்'... 'பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரையில் காண்பவர்கள் மட்டும் ஹீரோகள் அல்ல, நமது அன்றாட வாழ்க்கையில் பல ஹீரோக்களை நாம் கடந்து சென்றிருப்போம். அதேபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தை நிறுத்துகிறார். எதற்காக அவர் பேருந்தை நிறுத்தினார் என யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சாலையின் ஓரமாக மாற்றுத்திறனாளி ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார். அவர் அந்த பேருந்தில் செல்ல வேண்டும். ஆனால் பேருந்து வேகமாகச் சென்றதால் அவரால் ஏற முடியாமல் போனது.
இதைக் கவனித்த அந்த பெண், ஓடி வந்து பேருந்தை நிறுத்தி, நடத்துநரிடம் விவரத்தைக் கூறுகிறார். பின்னர் அந்த பெண் மாற்றுத் திறனாளியை அழைத்துக் கொண்டு அந்த பேருந்தில் ஏற்றி விட்டுத் திரும்பிச் செல்கிறார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அந்த பெண்ணை பாராட்டியதோடு, இந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
