'21 பேரை கொன்ற பஸ் டிரைவர்...' 'காதலிக்கு கடைசியா ஒரு ஒரு வாய்ஸ் மெசேஜ், அதுல...' எதுக்காக இப்படி பண்ணினார்...? - கோர சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jul 17, 2020 11:51 AM

சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அன்ஷுன் நகரத்தில் கடந்த 7-ம் தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் திடீரென அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குளானது.

China Guizhou bus driver killed 21 passengers turned lake

இந்த பயங்கர விபத்தில் 12 மாணவர்கள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பஸ் விபத்துக்குள்ளான போது நடந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன. போலீசாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அன்ஷுன் போலீசார் கூறுகையில், ‘21 பேர் விபத்தில் பலியான சம்பவத்தில் பஸ்சின் டிரைவர் ஜாங் என்பவரும் அடங்குவார். அவர் 'ஷான்டி டவுன்' புனரமைப்பு திட்டத்தில் புதிய வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பித்தார். சீன அரசின் சட்டத்தின்படி, புதியதாக வீட்டுவசதி கோருவோர், ஏற்கனவே இருந்த வீட்டை இடித்துவிட வேண்டும். அதற்கு பதிலாக நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.

அதன்படி பஸ் டிரைவர் ஜாங்குக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 8 லட்சம் வரை ெகாடுக்கப்பட்டது. புதிய வீட்டை கட்டித் தரும் முன், வாடகைக்கு தங்குமிடம் கேட்டு பல இடங்களில் தேடியுள்ளார். எங்கும் அவருக்கு வாடகை வீடு கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீடு இடிக்கப்பட்டது. அதனால் தவித்த ஜாங், வீடற்றவராக சிரமத்துக்கு ஆளானார். ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த அவர் சம்பவம் நடந்த 7ம் தேதி குடிபோதையில் பஸ்சை இயக்கி உள்ளார். சீன மதுபான பாட்டில் பஸ்சில் இருந்தது. சம்பவம் நடப்பதற்கு முன் தனது காதலிக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், இன்று ‘உலகம் சோர்வடையும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த கோர சம்பவம் மக்களிடையே பயங்கர  ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China Guizhou bus driver killed 21 passengers turned lake | World News.