‘நொடியில் நடந்து முடிந்த பயங்கரம்..’ ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் பலியான சோகம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 18, 2019 10:53 AM

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் வேன் கவிழ்ந்ததில் பெண்கள், குழந்தை உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

6 dead in road accident near Srivaikuntam Thoothukudi

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கருகங்குளம் அருகே வந்தபோது, வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதில் பலத்த காயமடைந்த 12 பேர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்து ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #SRIVAIKUNTAM #THOOTHUKUDI