‘சர்ச்சையை ஏற்படுத்திய விதிமுறை’... ‘இந்திய முன்னாள் வீரர் தலைமையில்’... ஐசிசி புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 29, 2019 05:18 PM

பவுண்டரிகளின் எண்ணிக்கையை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறையை மாற்றுவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anil Kumble led ICC cricket panel to discuss boundary count rule

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி, கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த முறையை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கமிட்டி, இதுபற்றி கூடி விவாதிக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மானேஜர் ஜியாப் அலர்டைஸ் தெரிவித்துள்ளார். போட்டி சமனில் முடிந்தால், சூப்பர் ஓவர்படி வெற்றியை தீர்மானிக்கும் முறை 2009-ம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பவுண்டரி முறையில் வழங்கப்பட்ட முடிவு பற்றி புகார் எழுந்ததால், அதை மாற்றுவது குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.