'யாரா இருந்தாலும் சரி...' - கனடா பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த 'நடிகை' குஷ்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மிகப் பெரிய போராட்டமாக இது உருவெடுத்துள்ள நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கூறுகையில், போராட்டம் பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாகவும், உரிமைகளைப் பாதுகாக்க இந்தியாவில் நடைபெறும் இந்த அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை, இது குறித்து பேசும்போது, கனடா பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்கள் இந்தியாவில் நடைபெறும் விவகாரம் பற்றி தவறான தகவலை தெரிவிப்பதாகவும், ஜனநாயக நாட்டின் உள்விவகாரத்தில் இவர்களின் கருத்து தேவையற்றது என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜஸ்டின் ட்ரூடோவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது தேவையில்லாதது” என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் குஷ்பு இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
