‘நாங்க கரெக்ட்டாதான் போனோம்'.. ‘திடீரென எங்கிருந்தோ வந்த கண்டெய்னர்’.. குஷ்பு பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கண்டெய்னர் லாரி மோதி கார் விபத்துக்குள்ளான சம்பவம் தன்னை குறிவைத்தே நிகழ்ந்துள்ளதாக குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
திரைப்பட நடிகையும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு, தனது காரில் வேல் யாத்திரைக்காக இன்று கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று முந்திச்செல்ல முயன்றது. அப்போது குஷ்பு சென்ற கார் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் காரின் கண்ணாடி மற்றும் கதவு உடைந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியானது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் அப்துல் அக்கீம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து உடனே குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‘கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. யாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. கடலூர் நோக்கி வேல் யாத்திரைக்கு சென்றுகொண்டு இருக்கிறேன். கடவுள் முருகன் என்னை காப்பாற்றி விட்டார்’ என பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் குஷ்பு பயணம் மேற்கொண்டார்.
Met with an accident near Melmarvathur..a tanker rammed into us.With your blessings and God's grace I am safe. Will continue my journey towards Cuddalore to participate in #VelYaatrai #Police are investigating the case. #LordMurugan has saved us. My husband's trust in him is seen pic.twitter.com/XvzWZVB8XR
— KhushbuSundar ❤️ (@khushsundar) November 18, 2020
இந்த நிலையில் இந்த விபத்து தன்னை குறிவைத்தே நடந்திருப்பதாக தற்போது குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், ‘தனது கார் சரியான பாதையிலேயே சென்றதாகவும், எங்கிருந்து வந்தது என்ற தெரியாத லாரி திடீரென கார் மீது மோதியதாகவும், மேலும் கண்டெய்னர் லாரி மீது தனது கார் மோதவில்லை’ என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Request the press to understand that a container rammed into me and not the other way. My car was on the move in the right lane and this container came from nowhere and rammed into me. Police are investigating n questioning the driver to rule out any foul play.
— KhushbuSundar ❤️ (@khushsundar) November 18, 2020