“ரொம்ப நாள் கேப்க்கு அப்றம் சென்னை வந்திருக்கேன்!.. இத பத்தி பேசாம எப்படி?” .. பாஜக தலைவர் ‘அமித் ஷா’ அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அமித் ஷா, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல், கூட்டணி தொடர்பாகவும், கட்சி செயல்பாடுகள் தொடர்பாகவும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

பின்னர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுக்கச் சென்ற அவர், மாலை 4:30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “இன்று நான் சென்னை வந்திருக்கிறேன். மோடி அரசு தமிழகத்துக்குச் செய்த நலத்திட்டங்களை பட்டியல் போட்டு சொல்ல நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா?” என்றும், “ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளுக்கு என்னதான் தகுதி இருக்கிறது” என்றும் கேட்டார்.
மேலும் பேசியவர், “சிறிது காலம் இடைவெளிவிட்டு தமிழகம் வந்திருப்பதால் கொஞ்சம் அரசியல் பேசுகிறேன். தமிழகத்தில் தி.மு.கவின் வாரிசு அரசியலுக்கு நாங்கள் முடிவு கட்டுவோம். எங்கள் மீது ஊழல் குற்றசாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர் உங்கள் குடும்பம் செய்ததை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
