"கேம்ங்குற பேருல நீங்களும் தனலட்சுமியும்.. பர்சனலா TARGET பண்றீங்க".. ஆவேசமான விக்ரமன்.. அடுத்தடுத்து வெடித்த வார்த்தைப் போர்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பக்கம் கலகலப்பாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இயங்கி கொண்டே இருந்தாலும் டாஸ்க் என்று வந்து விட்டால் அங்கே நிச்சயம் களேபரம் தான்.

பொம்மை டாஸ்க்கின் போது ஷெரினா கீழே விழுந்தது முதல் அவரை தள்ளி விட்டது யார் என்பதில் பெரிய குழப்பமே அரங்கேறி இருந்தது. இதனால் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வந்ததால் அந்த வாரமே களேபரம் ஆகி இருந்தது.
இதன் பின்னர் வார இறுதியில் வந்த கமல்ஹாசன், அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆதாரங்களுடன் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இதனிடையே, ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா உள்ளிட்ட போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். அப்படி ஒரு சூழலில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடந்து வருகிறது. இதில், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை இனிப்பு கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு சென்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர். இதில், தனலட்சுமி மற்றும் மணிகண்டன் ஆகியோரிடையே சண்டை நடந்திருந்தது அதிக சலசலப்பை அங்கே உண்டு பண்ணி இருந்தது.
இந்த நிலையில், ஃபேக்டரி டாஸ்க்கிற்கு இடையே விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் சண்டை போட்டு கொண்ட விஷயம் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"எல்லாத்துக்கும் பொய் பேசுறீங்க விக்ரமன். அது கரெக்ட்டா நியாயப்படுத்தி பேசுறீங்க. ரொம்ப தப்பு" என அமுதவாணன் ஆவேசமாக பேச, "கேம் என்ற பேர்ல நீங்க செமையா பர்சனல் டார்கெட் பண்றீங்க. வாய மூடிக்கங்க சொல்லிட்டேன்" என விக்ரமனும் பதிலுக்கு கோபம் அடைகிறார்.
அப்போது அருகே நிற்கும் மைனாவிடம் அமுதவாணன் பேசும் போது, "மைனா பாருங்க. நான் பேசும்போது வாயை மூடிக்கோங்கன்னு சொல்றாரு" என விக்ரமனை அவர் குறிப்பிட்டதும் "பர்சனலா எதுக்கு டார்கெட் பண்றீங்க" என கொந்தளிப்பில் விக்ரமன் கேள்வி எழுப்புகிறார்.
தொடர்ந்து வாயை மூடிக்கொண்டு இருக்க சொன்னதற்கு அமுதவாணனிடம் மன்னிப்பும் கேட்கிறார் விக்ரமன். நான் பொய் சொல்வதாக ஏன் என்னை கூறுகிறீர்கள் என்று திருப்பி அமுதவாணனிடமும் விக்ரமன் கேள்வி எழுப்புகிறார். இந்த விஷயம் மிகப்பெரிய பூதாகரமாக விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஆகியோரிடையே வெடிக்க, "நானும் அப்போதிலிருந்தே பார்க்கிறேன் நீங்களும் தனலட்சுமியும் தொடர்ந்து கேம் என்கிற பெயரில் பர்சனல் அட்டாக் பண்ணிட்டு இருக்கீங்க" என உச்சகட்டமாக விக்ரமன் கோபம் கொள்கிறார்.
தொடர்ந்து தனலட்சுமியும் அங்கே வர நீங்கள் மட்டும் பேசுவது நியாயமானது என்பது போல பேசாதீர்கள் என விக்ரமனிடம் குறிப்பிடுகிறார். மேலும் அனைத்தையும் விக்ரம் தான் கிரியேட் செய்வதாகவும் தனலட்சுமி குறிப்பிட இதற்கும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார் விக்ரமன். அமுதவாணன் - விக்ரமன் இடையே தொடங்கிய சண்டை அடுத்தும் ஒரு சில இடங்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் நீடித்திருந்தது.

மற்ற செய்திகள்
