புதுப் பொண்டாட்டி கூடவும் சண்டை.. பரிதாபமாக வெளியேறிய கோபி.! ஹனிமூன் போன மனுசனுக்கு இப்படி ஒரு நிலைமையா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடர், ஒவ்வொரு எபிசோடிலும் பல பரபரப்பான திருப்பங்களுடன் தான் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்ய அனைத்து வழிகளிலும் திட்டம் போட்டு வந்த கோபி, கடைசியில் அதனை நிறைவேற்றவும் செய்து விட்டார். முன்னதாக, மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு நீண்ட காலம் அவர் ஏமாற்றியும் வந்தார்.
இதன் பின்னர், சமீபத்தில் ராதிகாவை திருமணம் செய்து கொண்ட சமயத்தில், பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளும் கூட பிக்பாஸ் தொடரில் அரங்கேறி இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது பாக்கியலட்சுமி தொடர் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்து வருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் போய்க் கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். மறுபக்கம், தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் கொடைக்கானலுக்கு தேனிலவுக்காகவும் வந்துள்ளார் கோபி.
அப்படி ஒரு சூழ்நிலையில், அலுவல் நிகழ்ச்சி ஒன்றில் கோபி விருது வாங்க மேடையேறுகிறார். கோபியின் மனைவியை தொகுப்பாளர் மேடைக்கு அழைக்க போவதாக அறிவிக்கிறார். இச்சூழலில் ராதிகா & பாக்கியலட்சுமி இருவரில் ஒருவரை தான் அழைக்கும் வாய்ப்பு இருப்பதால் யார் பெயரை அழைப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்படுகிறது. அப்போது தொகுப்பாளர் பாக்கியலட்சுமியை மேடைக்கு அழைக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே ராதிகா சென்றுவிடுகிறார்.
இதனிடையே, அறைக்குள் கோபி மற்றும் ராதிகா ஆகியோர் சண்டை போடவும் செய்கின்றனர். "ராதிகா, நீ ரொம்ப படுத்திட்டு இருக்கே" என கோபி சொல்ல, அங்கிருக்கும் பொருளை தூக்கி போட்டு நானா நானா என்றும் ராதிகா கேட்கிறார். மேலும், "இப்போ நான் விருது வாங்கும் போது, என் புருஷன் என கூறி, எவனோ ஒருவன் மேடை ஏறுகிறான். நீங்கள் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கும் போது எப்படி இருக்கும்?" என்கிறார் ராதிகா.
இதனை கேட்டதும் ராதிகாவை அடிக்கவும் கை ஓங்குகிறார் கோபி. இதனால், ராதிகாவும் அதிர்ச்சி அடைய "முடியல முடியல" எனக்கூறிய படி, அறையில் இருந்தும் கோபி வெளியேறுகிறார். "உங்களை கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது இதனால் எனக்கு அவமானம் தான் மிச்சம்" என்றும் ராதிகா கத்துகிறார்.
இதனை கேட்டுக் கொண்டே கோபியின் மகன் எழில் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி ஆகியோர், கோபியை வேடிக்கையாக பார்த்து விட்டு கடந்து செல்கின்றனர். இரண்டாவது திருமணம் செய்த பின்னர், கோபி சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | Video : சூர்யகுமாரை பங்கமா கலாய்ச்ச ரோஹித்.. "அதுலயும் ஒரு போஸ் கொடுத்தாரு பாருங்க"!!

மற்ற செய்திகள்
