'அதிரடியாக புகுந்த அதிகாரிகள்'...'கட்டுக்கட்டாக கரன்சிகள்'... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனியார் ஏஜென்சி ஒன்றில் இருந்து கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவின் திருச்சூர் நகரில் குருவாயூர் பகுதியில் கிழக்கு நடா என்ற இடத்தில் வெளிநாட்டு கரன்சிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஏஜென்சி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொச்சி சுங்க இலாகா அதிகாரிகள் இந்த ஏஜென்சியில் திடீரென இன்று சோதனை நடத்தினர்.
இதில், ரூ.1.28 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று, இந்த ஏஜென்சியில் இருந்து ரூ.44.56 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத இந்திய கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதுபற்றி சுங்க தடுப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு ஏஜென்சியானது தங்களிடம் இருந்த பணத்திற்கான சட்டப்பூர்வ ஆவணங்களோ அல்லது உரிமங்களோ சமர்ப்பிக்க முடியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.