தலைமறைவான ‘தம்பதி’.. நோட்டீஸ் அனுப்பிய அமெரிக்க ‘இண்டர்போல்’.. வெளியான பரபரப்பு பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆந்திர தம்பதிக்கு அமெரிக்க இண்டர்போல் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுனில்-பிரணீதா தம்பதியினர். இவர்கள் மாணவர்களிடம் F1 மற்றும் H-1B விசா வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும், தலா 25 ஆயிரம் டாலர் வீதம் 10 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தம்பதியினர் திடீரென தலைமறைவாகியுள்ளனர்.
இதனால் பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தம்பதியினர் அமெரிக்காவில் இருந்து வெளியேறி ஐரோப்பாவில் பதுங்கியிருக்கலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் சுனில்-பிரணீதா தம்பதிக்கு எதிராக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையும், இண்டர்போல் (Interpol) அமைப்பும் லுக்அவுட் (lookout) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மற்ற செய்திகள்
