'ஐயா... நீதிபதி ஐயா... என் ஆளு 8 வருஷமா ’டைம் வேஸ்ட்’ பண்றான்யா!'.. நிச்சயமா அவன் சரிபட்டு வரமாட்டான்... நீதிமன்றத்தை அதிரவைத்த இளம்பெண்!!
முகப்பு > செய்திகள் > உலகம்8 வருடமாக காதலித்தும், கல்யாணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்துவதாக இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

சாம்பியா நாட்டில், கெர்ட்ரூட் கோமா என்ற பெண், ஹெர்பர்ட் சலலிகி என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் இணை பிரியா அன்பை ஒருவர்மீது ஒருவர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், ஹெர்பர்ட் சலலிகி திருமண விசயத்தில் மட்டும் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை.
இப்போது கல்யாணம், அப்போது கல்யாணம் என இழுத்தடித்த ஹெர்பர்ட் மீது ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன கெர்ட்ரூட், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, இவர்கள் காதலின் வெளிப்பாடாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும், ஹெர்பர்ட் காதலியிடம் வரதட்சணையும் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்கள் திருமணத்திற்கு தேவையான பணம் ஹெர்பர்ட்டிடம் தற்போது இல்லை.
8 வருடமாக காதலித்து விட்டு, கல்யாணத்துக்கு மட்டும் காலம் தாழ்த்தும் காதலன் மீது இளம்பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
