எங்கள சேர்த்து வச்சது 'இது' தான்!.. ஹனிமூன் டிரிப்-ஐ கேன்சல் பண்ணிட்டு... புதுமண தம்பதி செய்த தரமான சம்பவம்!.. வாயடைத்து போன ஊர் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் தேனிலவு கொண்டாட ஊட்டி, கொடைக்கனல், அல்லது வெளிநாட்டுப்பயணம் செல்வார்கள்.

ஆனால், கர்நாடகாவை சேர்ந்த புது மண தம்பதி வித்தியாசமாக, தங்கள் காதல் வளர காரணமாக இருந்த கடற்கரையை சுத்தப்படுத்தி நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர். அதுவும் 10 நாட்கள் தொடர்ந்து சுத்தம் செய்து 600 கிலோ குப்பையை அகற்றி கடற்கரையை பளிச்சென்று மாற்றியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள பைண்டூரை சேர்ந்த அனுதீப் ஹெக்டேவும் மினுஷா காஞ்சனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் பெரும்பாலும் சந்தித்துக்கொள்வது மங்களூர் சோமேஷ்வரா கடற்கரையில்தான்.
இந்த பீச்சில்தான் இவர்கள் காதல் செழித்து வளர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் கடந்த நவம்பர் 18-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்கு பின்னர் தேனிலவுக்கு செல்லும் முன் தங்கள் காதல் வளர உதவிய சோமேஷ்வரா கடற்கரைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தனர். இதையடுத்து, இருவரும் அந்த கடற்கரையை சுத்தம் செய்ய திட்டமிட்டனர்.
சோமேஷ்வரா கடற்கரையில் குவிந்து கிடந்த காகிதங்கள், குப்பை கூளங்கள், மதுபாட்டில்கள் போன்ற கழிவுகளை அகற்ற தொடங்கினர். திருமணத்துக்கு பின்னர் 10 நாட்களாக தினமும் சென்று கடற்கரையில் குவிந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்த ஆரம்பித்தனர். இந்த தம்பதி அகற்றிய குப்பையின் எடை மட்டும் 600 கிலோ ஆகும்.
தொடக்கத்தில் இவர்களின் தூய்மை பணியை, கடற்கரைக்கு வந்தவர்கள் வேடிக்கையாக பார்த்து சென்றனர். பின்னர், இளைஞர்கள் சிலரும் தம்பதியோடு சேர்ந்து தாங்களும் குப்பைகளை சேகரிக்க தொடங்கினர். இவர்களால் மலை போல குவிந்த குப்பைகளை கண்ட மங்களுர் மாநகராட்சி வண்டிகளை அனுப்பி அவைகளை அள்ளிச் சென்றது.
இவர்களின் அயராத முயற்சியால் சோமேஷ்வரா கடற்கரை பளிச்சென்று மாறியது.
தங்கள் காதலை வாழ வைத்த கடற்கரையை தூய்மையாக்கிய தம்பதியின் பணியை பொதுமக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

மற்ற செய்திகள்
