'LOTTERYல ஜெயிச்சதோ ஆயிரம் கோடிக்கு மேல'... 'ஆனா, வீட்ல செகண்ட் ஹேண்ட் காரா?!!'... 'உச்சக்கட்ட ஷாக் கொடுத்த தம்பதி சொன்ன பதில்!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்லாட்டரியில் 1140 கோடி ரூபாய் வென்ற தம்பதி அதன்பின்னர் செய்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டனில் வசிக்கும் பிரான்சிஸ் - பேட்ரிக் தம்பதி பிரிட்டனின் தி நேஷனல் லாட்டரியின் யூரோ மில்லியன் திட்டத்தின் கீழ் 1140 கோடி ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில்) வென்று சாதனை படைத்துள்ளனர். 2019 ஜனவரியில் இந்த ஜோடி வெற்றியாளராக ஆனபோது இதுவே 25 ஆண்டு வரலாற்றில் லாட்டரியில் வெல்லப்பட்ட நான்காவது மிக அதிக தொகையாகும். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை வென்ற பிறகும், இந்த தம்பதி செய்த காரியம் கேட்பவர்கள் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லாட்டரியில் 1140 கோடி ரூபாயை வென்ற இந்த தம்பதி வெற்றிக்கு பிறகு தங்களுக்கென்று 2 லட்சத்தை விட குறைவான விலையில் ஒரு செகண்ட் ஹேண்ட் ஜாகுவார் காரையே வாங்கிக்கொண்டுள்ளனர். அதோடு இவர்களுடைய மகள்களும் செகண்ட் ஹேண்ட் கார்களைதான் பயன்படுத்துகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி லாட்டரியை வென்ற பிறகு இந்த தம்பதி அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர். அதன்பின்னர் அந்த பணத்தை உபயோகித்து இவர்கள் சுமார் 175 குடும்பங்களுக்கு உதவியுள்ளனர். இந்த தம்பதியின் உதவியால் இவர்களுடைய நண்பர்கள் பலரும் புதிய வீடுகளை வாங்கியுள்ளதாவும், தங்களுடைய கடன்களையும் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லாட்டரி வென்ற சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொகையில் பாதிக்கும் மேல் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 600 கோடி) இப்படி மற்றவர்களுக்கு உதவியாக வழங்கியுள்ளதாக தற்போது பிரான்சிஸ் இங்கிலாந்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அதோடு இவர்கள் யாருக்கு பணம் கொடுத்தார்களோ, அவர்களும் மற்றவர்களுக்கு உதவியுள்ளதாகவும், இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், நகைகளை வாங்குவதை விட இப்படி மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பதிலேயே தனக்கு அதிக சந்தோஷம் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
