உல்லாசமாக இருக்க 'ரூ. 500' கேட்ட பெண்... கையில் இருந்ததோ '50 ரூபாய்'... 'ஆத்திரத்தில்' சிறுவன் செய்த 'வெறிச்செயல்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 12, 2020 03:53 PM

உல்லாசமாக இருக்க 500 ரூபாய் கேட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

A boy who kill a woman who asked for Rs.500 to have sex

விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி பகுதியில் பாழடைந்து காணப்படும் குடியிருப்பு பகுதிக்குள் இளம் பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு நிர்வாணமாக உயிரிழந்து கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர்.

ரயில்நிலையத்தை சுற்றியுள்ளவர்களில் யாரோ ஒருவர் தான் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் எனக் கருதிய போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியதில் 17 வயது சிறுவன் தனியொருவனாக இக்கொலையை செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

நேற்று அவரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்க 50 ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் அவர் 500 ரூபாய் கேட்டு சண்டை போட்டதாகவும் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்து அவரை கல்லால் அடித்து கொன்றுவிட்டதாக அந்த சிறுவன் குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அச்சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Tags : #VILUPURAM #WOMEN KILLED #BOY ARREST #POLICE ACTION