மார்ச் 31-க்குள்ள 'ஆதாரோட' பான் கார்ட 'லிங்க்' பண்ணிடுங்க... இல்லேன்னா கண்டிப்பா 'நாங்க' இத செஞ்சிருவோம்... கடும் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 15, 2020 03:37 PM

வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளை தடுக்கவும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பலமுறை ஏற்கனவே அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. கடைசியாக டிசம்பர் 31-க்குள் இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் கால அவகாசம் வேண்டும்  என கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

Around 17.5 crore PAN cards may become inoperative after 31 March

இந்தநிலையில் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஜனவரி 27-ம் தேதி வரையில் மொத்தம் 30.75 கோடி பான் எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 17.58 கோடி பான் எண்கள் ஆதாருடன் இன்னும் இணைக்கப்படாமல் இருக்கின்றன. இவை அனைத்தும் முடக்கப்படும் என்று தெரிகிறது.

எனவே இதுவரையில் நீங்கள் ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காவிடில் உடனடியாக அதை செய்து விடுங்கள். இல்லையெனில் உங்கள் பான் எண் செயலிழக்கப்படும் அபாயம் இருக்கிறது. ஆதார் எண்ணுடன், பான் எண்ணை எப்படி இணைப்பது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதைப்படித்து உங்களுக்கு எந்த வழி எளிதாக இருக்கிறது என்று கருதுகிறீர்களோ அந்த வழியில் உங்கள் பான் எண்ணை, ஆதார் என்னுடன் இணைத்து விடுங்கள்.

ஆன்லைன்

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற முகவரியில் வாடிக்கையாளர்களே ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். ஆதார் எண், பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.

எஸ்எம்எஸ்

எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம். ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து UIDPAN<12 டிஜிட் ஆதார் எண்><10 டிஜிட் பான் எண்> என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.

 

 

Tags : #AADHAAR