'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!' - துணை முதல்வர் ஓபிஎஸ் 'பரபரப்பு' கருத்து!.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?.. ஓபிஎஸ் சொல்ல வருவது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இருக்கும் - ஓபிஎஸ்
'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்றும்,
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது' என்றும் ஓபிஎஸ் ட்வீட் செய்திருக்கிறார்.
நாளை மறுநாள் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், 'எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே இதுவரை முடிவெடுத்துள்ளேன். இனியும் அவ்வாறே இருக்கும்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாளை மறுநாள் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு ட்வீட் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகவத் கீதையில் கிருஷ்ணர் உபதேசத்தை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
— O Panneerselvam (@OfficeOfOPS) October 5, 2020