"மக்கள் முதல்வர் ஓபிஎஸ்"!... என ஆதரவாளர்கள் கோஷம்!.. துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் தீவிர ஆலோசனை!.. முதல்வரின் மீட்டிங்கிற்கு ஆப்சென்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் பழனிசாமி நடத்தும் அரசு கூட்டங்களில் வழக்கமாக பங்கேற்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பங்கேற்கவில்லை.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திவரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம் நடந்த சூழலில், இன்று ஆலோசனை நடைபெறுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு தெரியும் என அதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, துணை முதல்வர் ஓபிஎஸ் தனது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, ஆதரவாளர்கள் 'மக்கள் முதல்வர் ஓபிஎஸ்' என கோஷம் எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
