"அவர ஏன் 'தல' 'டீம்'ல எடுத்தீங்க??.." வறுத்தெடுக்கும் 'நெட்டிசன்'கள்... சொல்ற 'காரணம்' தான் ஹைலைட்டே!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 04, 2020 09:08 PM

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அணியின் மீது அதிக விமர்சனம் எழுந்துள்ளது.

csk fans troll kedhar jadhav for his performance against kxip

முன்னதாக, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், தனக்கு வாய்ப்பு கிடைத்த முதல் மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக அடுத்த போட்டியில் ராயுடு களமிறங்கினார். விஜயை போல, சென்னை அணி வீரர் கேதார் ஜாதவ் மிடில் ஆர்டரில் மிக சுமாராக ஆடி வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், ஜாதவ் அணியில் இடம்பெறமாட்டார் என அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அவர் சென்னை அணியில் இடம்பெற்றது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பல மீம்ஸ்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். ஜாதவ், பஞ்சாப் அணிக்கு எதிராக 7 போட்டிகளில் மொத்தம் 10 ரன்களே எடுத்துள்ளார். அதில் 4 போட்டிகளில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியுள்ளார்.

இதனால், இன்றைய போட்டியிலும் ஜாதவ் சிறப்பாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில், அவர் மீதான விமர்சனங்கள் தொடரும் என்றே தெரிகிறது.

  

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Csk fans troll kedhar jadhav for his performance against kxip | Sports News.