சொல்லி அடிச்சு பட்டையை கெளப்பிய 'கில்லி'... பாராட்டித் தள்ளும் 'நெட்டிசன்'கள்... காரணம் என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 179 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடி வரும் நிலையில், இதுவரை விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் ஷேன் வாட்சன் மற்றும் டு பிளஸி ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
![shane watson back to his old form as he said yesterday shane watson back to his old form as he said yesterday](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/shane-watson-back-to-his-old-form-as-he-said-yesterday.jpg)
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் இதுவரை சிறப்பாக அமையாத நிலையில், சென்னை அணியின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள் ஆனது. அது அனைத்தையும் தவிடுபொடி ஆக்கும் வகையில், வாட்சன் மற்றும் டு பிளஸி ஆகியோர் அரை சதத்தை கடந்து அசத்தலாக ஆடி வருகின்றனர்.
இந்நிலையில், ஷேன் வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான ஆட்டம் விரைவில் வரவுள்ளது' என பதிவிட்டிருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை பார்முக்கு வராமல் இருந்து வந்த வாட்சன், இன்றைய போட்டியில் தான் நேற்று சொன்னதை போலவே பழைய பார்முக்கு வந்து சிஎஸ்கே ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார். அது மட்டுமில்லாமல், தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே, இந்த போட்டியில் வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர்.
இது தொடர்பாக வாட்சனை பாராட்டி பல மீம்ஸ்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
The perfect game for @ChennaiIPL is coming!!! 💪🏻💪🏻💪🏻@ChennaiIPL #WhistlePodu #Yellove https://t.co/SkA5TpvGOS
— Shane Watson (@ShaneRWatson33) October 3, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)