'அரக்கப்பரக்க ஓட வேண்டாம்'... 'வீட்டிற்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள்'... அதிரடியாகத் தொடங்கி வைத்த முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலைக்கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாய விலை கடை திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாயவிலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்படத் தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டன. இந்த நகரும் நியாய விலை கடைகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகரும் நியாய விலை வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலமாகத் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
