'தமிழகத்தின் மாநில சொந்த வருவாய் கணிசமாக உயர்வு'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் மாநில நிதி வருவாய், கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதத்தை விட இந்த ஜூலையில் (2020) கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ 11,756.98 கோடியாக இருந்த வருவாய், இந்த ஆண்டு ரூ 14,041.25 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது, 19.4% அதிக வருமானத்தை கொண்டு வந்ததாக ஆகும். இதில், தமிழகத்தின் சொந்த வரி வருமானம் மட்டும் 7,765.15 கோடியிலிருந்து ரூ 8,387.23 கோடியாக, அதாவது 8% உயர்ந்திருக்கிறது. State GST வரி வருமானம் மட்டும் ரூ 2360.40 கோடியிலிருந்து ரூ 2997.84 கோடியாக, 27% உயர்ந்திருக்கிறது. அதே போல், கலால் வரி வருமானம் 587.65 கோடியிலிருந்து 696.57 கோடி ரூபாயாக, 18.5% உயர்ந்திருக்கிறது.
இந்த ஆண்டு ஜூலையின் போது, மாநிலத்தின் நிதி பற்றாக்குறை (Fiscal deficit) ரூ 2605.34 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டிற்கான மொத்த நிதி பற்றாக்குறை ரூ 21833.48 கோடியாக இருக்கும் என CAG அறிக்கை ஒன்று கூறுகிறது. கொரோனா நோய் பரவல் காரணமாக, உலக நாடுகள் பலவும் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்துக்கொண்டிருப்பது போல், தமிழகமும் சிரமத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
இதில், நோய் கட்டுப்படுத்தும் மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகள் என, மாநிலத்திற்கு இந்த ஆண்டு கூடுதல் செலவுகள் ஏற்பட்டதால், நிதி பற்றாக்குறை சிறிது அதிகரித்துள்ளது. இருந்தபோதும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாநிலத்தின் சொந்த வருவாய் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த வருவாய் அதிகரிப்புக்கு முக்கிய காரணம், அம்மா அரசின் பொருளாதார நடவடிக்கைகளே எனக் கூறியுள்ளார்.
I am glad to share that the state's own revenue has shown a positive growth in July 2020 compared to July 2019 with the continuous efforts of Amma's Government. We will continue to strive hard for the development of Tamilnadu's economy. #TNAhead pic.twitter.com/SgrrlKCUVi
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 3, 2020