அதிமுக செயற்குழு கூட்டம்... அடுத்தடுத்து 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!.. மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க 'அதிரடி' முடிவுகள்!.. வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பரபரப்பான சூழலில் துவங்கிய அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் தமிழர்களை நியமிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கொரோனா பரவல் குறைந்துள்ளதை ஏற்றுள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்றும், கொரோனா கால செயல்பாட்டுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருமொழிக்கொள்கையே அதிமுக அரசின் கொள்கை. மொழி திணிப்பை அதிமுக அரசு ஏற்காது, அதிமுக நிர்வாகிகள் ஒன்றுபட்ட சிந்தனயோடு ஒன்றிணைந்து செயல்பட்டு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். மீண்டும் ஆட்சி மலர்ந்திட உழைப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
