தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கு?.. MIOT மருத்துவமனை அதிகாரப் பூர்வ அறிவிப்பு!.. விரைவில் குணம் பெற முதல்வர் பழனிசாமி வாழ்த்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக MIOT மருத்துவமனை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதற்கிடையே, இன்று காலை தேமுதிக நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை MIOT மருத்துவமனை தற்போது வெளியிட்ட அறிக்கையில், "தேமுதிக நிறுவனத்தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு.விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட்-19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது 22 செப்டம்பர் 2020 அன்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது, அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது.
அவர் கூடிய விரையில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முதல்வர் பழனிசாமி, "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன்.
திரு.விஜயகாந்த் அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
