'குடும்பத்துக்காக உழைத்த சித்ரா'!.. ஆனா... "கல்யாண செலவுக்கு கூட"... கொடுமையிலும் கொடுமை!.. திடுக்கிடும் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சித்ராவிடம் கல்யாண செலவுக்கு பணமில்லை என்று தனது அம்மா கூறியதை நினைத்து சித்ரா வருத்தப்பட்டதாக ஹேம்நாத்தின் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 9-ம் தேதி அதிகாலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை செய்து அவர் தான் தற்கொலைக்குத் துாண்டியதாகக் கூறி கைது செய்தனர்.
யாரையோ காப்பாற்றுவதற்காக தனது மகனை அவசர கதியில் போலீசார் கைது செய்ததாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் குற்றம்சாட்டினார்.
வியாழக்கிழமை தனது மகனை சந்திக்கச் சென்ற ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், விசாரணையின் போக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என புகார் தெரிவித்தார். அதேநேரம், சித்ராவிற்கு கடன் பிரச்னை இருந்திருக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் கூட அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் புதிய தகவலை தெரிவித்தார்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக தங்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதாகவும் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் சின்னத்திரை வட்டாரங்களிலும் விசாரணை நடத்தவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத்தின் தந்தை ரவிசந்திரன் புகார் அளித்தார்.
மேலும், அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, "குடும்பத்துக்காக உழைத்த என்னுடைய கல்யாண செலவிற்கு பணம் இல்லை என்று அம்மா கூறுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றும், அம்மா, அப்பாவின் 60-வது கல்யாணத்தை என் செலவில் சிறப்பாக நடத்தினேன் என்றும், வருத்தத்துடன் என்னிடம் சித்ரா தெரிவித்தார்.
ஆனால், திருமண செலவு முழுவதும் மணமகன் வீட்டு சார்பாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சித்ராவிடம் நான் சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறினார். இந்த வீட்டில் நான் வந்து வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன் என்று சித்ரா கூறினார். சரிவிடும்மா பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சமாதானப்படுத்தினேன்.
அதன் பின் இரண்டு குடும்பங்களும் சந்தோஷமாக திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தருவாயில் கடந்த 9.12.2020 அன்று அதிகாலை 2.58 மணியளவில் எனக்கு என் மகன் ஹேம்நாத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, நான் சித்ராவின் தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு செய்தியை கூறிவிட்டு ஹோட்டலுக்கு வருகிறேன் என்று கூறியதற்கு அங்கு வர வேண்டாம் என்றும் கேஎம்சி மருத்துவமனைக்குத் தான் வருகிறது என்றார். நானும், எனது மனைவியும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். இரு குடும்பத்தாரும் துக்கத்தினை சகஜமாக பரிமாறிக் கொண்டோம்.
அதன் பின்னர் என் மகனை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பின் சித்ராவின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து காவல்நிலையம் சென்ற சித்ராவின் தாயார் என் மகன் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது."
இவ்வாறு ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
