"நீங்க நல்லா இருக்கணும் அண்ணா".. பிரபல முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு.. மனசார வாழ்த்திய திருநங்கைகள்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நகைச்சுவை நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது, அங்கு திரண்ட தனது ரசிகர்களுடன் அவர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

யோகி பாபு
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.
ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
திருச்செந்தூர் முருகன்
தீவிர முருக பக்தரான யோகி பாபு படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையால் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வரும் யோகி பாபு ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு சென்றிருக்கிறார். மூலவரை வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்த யோகி பாபு பின்னர் பிரகாரத்தை சுற்றி வந்திருக்கிறார்.
அப்போது அங்கு திரண்ட அவரது ரசிகர்களுடன் அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். யோகி பாபுவை காண காத்திருந்த திருநங்கைகளை அவர் நலம் விசாரிக்க "நீங்க நல்லா இருக்கணும் அண்ணா" என திருநங்கைகள் வாழ்த்தியபடி அங்கிருந்து சென்றிருக்கின்றனர். பின்னர் அங்கிருந்த சில வயது முதிர்ந்தவர்களிடம் அவர் ஆசிர்வாதமும் பெற்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
