திருடப்போன இடத்தில் "கலகலப்பு" பட பாணியில் ஓட்டைக்குள் சிக்கிய உடல்.. பலே திருடனுக்கு நேர்ந்த பங்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் உள்ள பிரபல அம்மன் கோவிலில் திருடிவிட்டு வெளியேற முயற்சிக்கையில் அங்குள்ள சுவரில் இருந்த ஓட்டையில் சிக்கி திருடன் ஒருவர் அகப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருட்டு
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ளது ஜாடுபுடி கிராமம். இங்கு பிரசித்திபெற்ற எல்லம்மா கோவில் அமைந்து உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த அம்மனை கிராமத்து தேவதையாக கருதி வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று பாப்பா ராவ் என்பவர், இந்த கோவிலுக்குள் திருட சென்றிருக்கிறார். அப்போது கோவில் சுவரில் இருந்த ஓட்டை வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார் பலே பாப்பா ராவ். அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க நகைகளை திருடிய பாப்பா ராவ் மீண்டும் அதே ஓட்டை வழியாக அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது, அவருடைய உடல் அந்த ஓட்டைக்குள் சிக்கிக்கொண்டது.
உடம்பின் ஒரு பகுதி கோவிலின் உள்ளேயும் ஒரு பகுதி கோவிலின் வெளியேயும் சிக்கிக்கொண்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்த பாப்பாராவ் எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
கைது
கொஞ்ச நேரத்தில் விடிந்திருக்கிறது. அப்போது அந்த வழியாக வந்த கிராம மக்கள் சுவரில் வித்தியாசமாக தொங்கிக் கொண்டிருந்த பாப்பா ராவை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர். இதனை அடுத்து கூட்டம் கூடிவிட்டது. உடனடியாக எல்லம்மா கோவில் அருகே திரண்ட கிராம மக்கள், ஓட்டையில் சிக்கி இருந்த பாப்பா ராவை மீட்டு உள்ளனர்.
அதன் பிறகு காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஷயம் அறிந்து விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் பாப்பா ராவை கைது செய்து இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் அம்மனுக்கு செலுத்தியிருந்த நகைகளை திருட போன நபர், அங்கிருந்த ஓட்டைக்குள் உடல் மாட்டியத்தால் சிக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
