கவலையை விடுங்க பாஸ்.. காதல் தோல்வியில் இருந்து இளைஞர்களை மீட்க புது திட்டத்தை கொண்டுவந்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்தில் காதல் தோல்வியில் இருந்து இளைஞர்களை மீட்க புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு துவங்கியுள்ளது. இது உலகம் முழுவதும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
காதல் உலகம் முழுவதற்குமான பொதுமையான ஒன்றாகும். அனைத்து விதமான வேறுபாடுகளையும் காதல் தகர்த்துவிடும் வல்லமையை பெற்றிருக்கிறது. இளம் பருவத்தில் துளிர்விடும் காதல் வெகுசிலருக்கே கைகூடவும் செய்வதை நாம் கண்டிருப்போம். காதல் கைகூடாத வருடத்தில் பல இளம் வயதினர் விபரீதமான முடிவுகளை எடுப்பது குறித்தும் தொடர்ந்து கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் இதற்காக புதிய திட்டத்தை துவங்கி உள்ளது நியூசிலாந்து அரசு.
Images are subject to © copyright to their respective owners.
பிரச்சாரம்
அதாவது `Love Better’ எனும் பிரச்சாரம் மூலமாக காதலில் தோல்வியடைந்தவர்களை மீட்க முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்சாரம் மூலமாக காதலில் தோற்றவர்கள் தங்களுடைய நிஜ அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இதன் வாயிலாக காதல் தோல்வியில் இருந்து எப்படி மீள்வது? வாழ்க்கையை நேர்மறையாக மாற்றிக்கொள்வது எப்படி என இளைஞர்களுக்கு புரிதல் ஏற்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என்கின்றனர் அதிகாரிகள்.
இதுகுறித்து அந்நாட்டின் சமூக மேம்பாட்டிற்கான இணை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிறருக்கோ அல்லது தமக்கோ தீங்கு விளைவிக்காமல் வாழ ஏராளமான வழிகள் இருப்பதை இளைஞர்களுக்கு சுட்டிக்காட்டுவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம். நியூசிலாந்தைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காதல் முறிவை எதிர்கொள்ள தங்களுக்கு ஆதரவு தேவை என்று தெரிவித்தனர். ஆகவே இந்த பிரச்சாரத்தை துவங்கியுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
பாராட்டு
மேலும் அந்த அறிக்கையில்,"இந்த ’லவ் பெட்டர்’ பிரச்சாரம், இளைஞர்களை ஊக்குவிக்க, அவர்களை மனதளவில் பலப்படுத்த சிறந்த வழியாக இருக்கும். மேலும் இது குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான நியூசிலாந்து அரசின் புதிய திட்டமாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக 6.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளது. காதலில் தோற்றவர்களை நல்வழிப்படுத்த நியூசிலாந்து அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.