கோவிலுக்குள் திருட முயன்று... கடைசியில அங்கேயே உயிரிழந்த திருடன்... நடந்தது என்ன??
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது நிறைய இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பான செய்திகளை நாம் நிறைய கடந்து வந்திருப்போம். அதிலும் குறிப்பாக, திருட்டு சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளோ அல்லது திருட நடக்கும் முயற்சிகள் குறித்து என விதமான வகையில் வீடியோக்கள் அல்லது செய்திகள் வைரலாகும்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | 47 வருசத்துக்கு முன்னாடி காணாம போன மாணவன்.. உடல் பாகங்கள் கிடைச்சாலும் தொடரும் அந்த ஒரு மர்மம்!!
இந்த நிலையில், தற்போது கோவிலில் திருட முயன்ற திருடன் ஒருவனுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான செய்தி, அதிக பரபரப்பை ஏறப்டுத்தி உள்ளது.
ஹைதராபாத் பகுதியில் குஷைகுடா என்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியில் இந்த கோவில் மிக பிரபலமாக இருக்கும் சூழலில், அங்கே ராஜு என்ற நபர் நள்ளிரவில் நுழைந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி இருக்கையில், ராஜு என்பவர் கோவிலில் தெய்வ சிலைக்கு அருகே இருந்த உண்டியலை கொள்ளையடிக்கவும் முயன்றுள்ளார். இதற்காக உண்டியலை உடைத்து அதனை எடுக்க ராஜு முயற்சி செய்த சூழலில் அதன் சத்தம் கேட்டு அங்கே காவலாளியாக இருந்தவர் இதனை கண்டுபிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து திருட்டை தடுக்க அந்த காவலாளி முயற்சி செய்த சூழலில், அவருக்கும் ராஜூவுக்கும் இடையே மாறி மாறி சண்டை நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. காவலாளியை கற்கள் கொண்டு ராஜு தாக்கிய சூழலில், அருகே கிடந்த கட்டையை எடுத்து ராஜூவை அந்த காவலாளி பதிலுக்கு தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
ராஜுவின் தலையில் காவலாளி தாக்க, இதன் காரணமாக ரத்த வெள்ளத்திலும் அவர் துடிதுடித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திலேயே ராஜு உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. கோவிலில் திருட நுழைந்த திருடன், அங்கிருந்த காவலாளி தாக்கிய போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜு உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த சூழலில் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
Also Read | சாலை ஓரத்தில் வாழ்ந்து.. உயிரிழந்த மூதாட்டி.. சுருக்குப் பையை திறந்ததும் கலங்கி போன போலீஸ்!!

மற்ற செய்திகள்
