தீ.. இது தளபதி.. "விஜய் அங்கிள்-அ பார்க்கணும்".. ஏங்கிய சிறுமிக்கு சர்ப்ரைஸ் .. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னை பார்க்க வருமாறு கோரிக்கை வைத்த சிறுமியுடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார் நடிகர் விஜய். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். கடந்த பொங்கலுக்கு இவர் நடித்திருந்த வாரிசு படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதற்கு படக்குழு தனி விமானத்தில் பயணித்திருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகியும் வந்தது.
சில தினங்களுக்கு முன்னர் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி, ‘விஜய் அங்கிள் என்ன பார்க்க வரமாட்டீங்களா?’ என பேசியிருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இதனையடுத்து இந்த விஷயம் விஜய்யின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து வீடியோ கால் மூலம் அபிதா பேகம் சிறுமியுடன் நடிகர் விஜய் பேசியிருக்கிறார். அப்போது, சிறுமியிடம் ‘க்யூட்டா இருக்கீங்க’ என விஜய் சொல்ல ‘நீங்களும் க்யூட்டா இருக்கீங்க’ என அந்தக் குழந்தையும் மழலை மொழியில் சொல்கிறது.இந்நிலையில் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
