'இவங்களுக்கு எல்லாம் சாப்பாடு கிடையாது'... 'ஹோட்டல்' எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 01, 2019 02:59 PM

மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என்று, புதுக்கோட்டையில் உள்ள உணவகம் பதாகை ஒன்றை வைத்துள்ளது.

No Food for you if you seeking religion says Pudukkottai hotel

இந்து மதத்தை சாராதவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி ஆர்டரை கேன்சல் செய்த நபரின் செயலுக்கு,  பலரும் தங்களது எதிர்ப்பினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் உணவிற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என ஸ்மோடோ நிறுவனம் பதிலடி கொடுத்தது பலரது பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் மூன்று இடங்களில் உணவகம் மற்றும் காபி பார் நடத்தி வரும், அருண்மொழி என்பவர் தனது உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு உணவு இல்லை என்று விளம்பரப் பலகை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர் ''ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் உணவு என்றும் அதில் மதம் பார்ப்பது என்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அதை கண்டிக்கும் வகையிலேயே தனது உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என விளம்பரம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனிடையே அருண்மொழியின் முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதேபோல் அனைத்து உணவகத்திலும் விளம்பரப் பதாகைகள் வைத்தால் இந்தியாவில் ஜாதி மத பாகுபாடே இருக்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Tags : #HOTEL #RELIGION #PUDUKKOTTAI #FOOD